குடியகழ்வு படி

பிற நாட்டிற்கு புலம்பெயர்ந்து சென்று அங்கு நிரந்தர வதிவிடம் (PR) பெற்ற ஒருவர் குடியகழ்வு படியினை பெற பின்வருமாறு தகுதி பெறுவார்:

 1. 18 வயது அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடைய தனி நபருக்கு ஆரம்ப படியாக USD 150,000 வழங்கப்படும்.
 2. குடியகழ்வு படியினை முழுமையாக பயன்படுத்தி 12 மாதங்களிற்கு பிறகு வருடாந்த படியாக USD 20,000 வழங்கப்படும்.

அசையும் மற்றும் அசையா சொத்துக்கள், உருவச் சொத்துக்கள் மற்றும் அருவச் சொத்துக்கள், நகைகள் போன்ற சொத்துக்களை விற்று பணமாக்குவதன் மூலம் கிடைக்கும் தொகையினை குடியகழ்வு படி உள்ளடக்கியதாக இருக்கும்.

நிரந்தர வதிவிடம் (PR) வழங்கப்பட்ட திகதியின் அடிப்படையில் தான் குடியகழ்வு படி வழங்குவதற்கான செயல்முறைகள் பின்பற்றப்படுகின்றது. அதற்கேற்ப, கீழ்வரும் நடைமுறைகள் பின்பற்றப்பட வேண்டும்:

 1. பிற நாட்டிற்கு புலம்பெயர்ந்து சென்று ஆடி மாதம் 12ம் திகதி 2013 இல் அல்லது அதற்கு பிறகு நிரந்தர வதிவிடம் (PR) பெற்றவர்களுக்கு
  1. செலாவணி கட்டுப்பாட்டாளரிடம் இருந்து குடியகழ்வு படியினை பெறுவதற்கு முன்கூட்டிய அனுமதி தேவையில்லை
  2. இலங்கையில் உள்ள உரிமம் வழங்கப்பட்ட வர்த்தக வங்கியியில் ஆரம்பிக்கப்பட்ட புலம்பெயர்ந்தோர் தடுக்கப்பட்ட கணக்கு (MBA) இன் மூலமாக மட்டும் தான் குடியகழ்வு படியினை அனுப்ப முடியும்.
  3. பிற நாட்டிற்கு சென்று குடியேறியவர் முதன் முறையாக இலங்கையில் இருந்து நிரந்தர குடியுரிமை விசாவில் வெளியேறும் பொழுது மொத்தமாக USD 5,000 இனை ஆரம்ப குடியகழ்வு படியாக காகித நாணய வடிவில் பெற்றுக் கொடுள்ளப்படும்.
  4. இலங்கையில் NRFC கணக்கில் அல்லது இலங்கைக்கு வெளியில் உள்ள கணக்கிற்கு மாற்றி குடியகழ்வு படியினை சேமிக்க முடியும்.
  5. வட்டி, வாடகை, குத்தகை வாடகை, இலாபங்கள், ஓய்வூதியங்கள் மற்றும் மேம்பட்ட வருடாந்த இலாபம் (ஊழியர் சேம இலாப நிதி (EPF), ETF, மற்றும் பணிக்கொடை) போன்ற தற்போதைய வருமானங்கள் MBA இல் வரவு வைக்க முடியும். மற்றும் அவை குடியகழ்வு படிக்கு புறம்பாக இலங்கையில் அல்லது இலங்கைக்கு வெளியில் உள்ள NRFC கணக்கிற்கு மாற்ற முடியும்.
 2. நிரந்தர வதிவிட உரிமை ஆடி மாதம் 12ம் திகதி 2013ற்கு முன்பாக பெற்று பிற நாட்டிற்கு சென்று குடியேறியவர்கள்
  1. இதன் அடிப்படையில் பிற நாட்டிற்கு சென்று குடியேறியவர்கள் குடியகழ்வு படியினை பெற செலாவணி கட்டப்பாட்டாளரின் அனுமதியினை பெற வேண்டும். இக் குடியகழ்வு படியினை வதிவற்றோர் தடுக்கப்பட்ட கணக்கு (NRBA) மூலமாகத்தான் அனுப்ப வேண்டும்.
  2. குடியகழ்வு படிக்கு விண்ணப்பிக்கும் போது புலம் பெயர்ந்தோர் நிதி மாற்றல் பிரிவிற்கு, கீழ் காணும் ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும்;
   1. பின்வரும் விபரங்கள் அடங்கிய கோரிக்கை ஒன்றினை செலாவணி கட்டுப்பாட்டாளரிடம் சமர்ப்பிக்க வேண்டும்,
    • புலம்பெயர்ந்தவரின் முழுப்பெயரம் முகவரியும்
    • புலம்பெயர்ந்தவரின் பிறந்த திகதியும் சிவில் அந்தஸ்தும்
    • புலம்பெயர்ந்தவருடன் இணைந்து செல்லும் ஏனையவர்களின் பெயர் (ஏதுமிருப்பின்)
    • நிரந்தர வதிவிடம் (PR) பெற்ற திகதி மற்றும் அதனை நிரூபிப்பதற்கான ஆவணங்கள்
    • புலம்பெயர்ந்தவரின் இலங்கையிலுள்ள வங்கி கணக்கு விபரங்கள் (கணக்கு இலக்கம், வங்கியின் பெயரும் கிளையும்) மற்றும் வெளிநாட்டில் உள்ள வங்கி கணக்கு விபரங்கள் (கணக்கு இலக்கம், வங்கியின் பெயரும் விலாசமும், SWIFT இலக்கம்)
    • புலம்பெயர்ந்தவரின் அட்டேணித்துவத்தின் பிரதி (ஏற்புடைத்தானவிடத்து)
   2. கோரிக்கையுடன் சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்கள்,
    • நிதியங்களின் மூலங்களை நிரூபிப்பதற்கான ஆவணங்கள்
    • வதிவற்றோர் தடுக்கப்பட்ட கணக்குகள் (NRBA), சேமிப்பு அல்லது நடைமுறை கணக்குகளின் உறுதிபடுத்தப்பட்ட கணக்கு மீதிகள் (கவனத்திற்கு! அனுப்பப்பட வேண்டிய முழுத் தொகையும் தனி ஒரு NRBA இல் இருக்க வேண்டும் மற்றும் நிலையான/ தவணைமுறை வைப்புக்கள் இவற்றிற்கு ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது)
    • ரூபா 1,000,000/= மேற்பட்ட அனுப்புதலுக்கு உள்நாட்டு இறைவரி ஆணையாளரிடமிருந்து பெற்றுக்கொள்ளப்பட்ட வரி தீர்ப்பனவு சான்றிதழின் மூலப் பிரதி
    • சரியாக முத்திரை பதிக்கப்பட்ட பிரமாண பத்திரம் மற்றும் சமாதான நீதிவான்/ சட்டத்தரணி நொத்தாரிசு/ சத்தியப்பிரமாண ஆணையாளரினால் ஆரம்ப ஒதுக்கீடு USD 150,000 அல்லது வருடாந்த படி USD 20,000 ற்கு அதிகமாக அனுப்பப்படவில்லை அல்லது அனுப்பப்பட மாட்டாது என்பதற்காக உறுதிசெய்யப்பட்ட ஆவணம். இவ்வாறு ஏதாவது நிதி மாற்றப்பட்டிருப்பின் அது தெரியப்படுத்தல் வேண்டும். (மாதிரிச் சத்தியக்கடதாசி).
    • பலம்பெயர்ந்தோர் புலம்பெயரும் நேரத்திலும் அதற்கு பின்னரும் பயன்படுத்தப்படும் இலங்கைக் கடவுச் சீட்டின் பக்கங்களின் பிரதியினை சமர்ப்பித்தல் வேண்டும். விண்ணப்பதாரி இலங்கை கடவுச் சீட்டு பிரதியினை சமர்ப்பிக்க முடியாதிருப்பின் அதற்கான காரணத்தை கூறி உறுதிமொழியினை சமர்ப்பிக்க வேண்டும்.

[குறிப்பு: விண்ணப்பதாரி யாராவது நிரந்தர வதிவிடம் பெறும் நேரத்திலும் தற்பொழுதும் கொண்டுள்ள இலங்கை கடவுச்சீட்டினை சமர்ப்பிக்க முடியாது போனால் அவர்கள் USD 150,000 பெறுவதற்கு தகுதி இல்லாதவர்கள் ஆகின்றனர். (இதற்கு பதிலாக அவர்கள் வருடாந்தம் USD 20,000 மட்டும் பெறுவதற்கு தகுதி உடையவர்கள்.].

புலம் பெயர்ந்தோரின் விசேட கனவத்திற்கு

 1. நிரந்தர வதிவிட அனுமதி பெற்று புலம் பெயர்வதற்கு தீர்மானித்தால் அவள்/அவர் தங்கள் இலத்திரனியல் நிதிய மாற்ற அட்டைகளை கையளித்து மற்றும் ரத்து செய்ய வேண்டும். (வரவட்டை மற்றும் செலவட்டை அடங்கலாக).
 2. புலம்பெயர்ந்தோர் குடியகழ்வு படியினை பெற்றுக் கொள்ளும் போது அவர்கள் ரூபாய் கணக்கினை வதிவற்ரோர் தடுக்கப்பட்ட கணக்கிற்கு (NRBA) அல்லது புலம்பெயர்ந்தோர் தடுக்கப்பட்ட கணக்கிற்கு (MBA) மாற்ற முடியும். அவர்களிற்கு பொருத்தமானதிற்கேற்ப.
 3. புலம்பெயர்ந்த நேரத்தில் இருந்து தாங்கள் இலங்கை கடவுச்சீட்டினை பாதுகாப்பாக வைத்துள்ளீர்களா என்பதை உறுதிப்படுத்துங்கள். ஏனெனில் அவை குடியகழ்வு படிக்காக விண்ணப்பிக்கும் போது அவசியமாகும்.

உசாத்துணை: