வதிவற்றோர்

 
இலங்கையில் உள்ள இராஜதந்திரப் பணிகள், இராஜதந்திர அதிகாரிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்காக வெளிநாட்டு நாணய மாற்று ரூபாக் கணக்கு

இலங்கையில் உள்ள வெளிநாட்டு இராஜதந்திரப் பணிகள், இராஜதந்திர அதிகாரிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினர், பின்வரும் தொழிற்பாட்டு அறிவுறுத்தல்களினால் குறித்துரைக்கப்பட்ட நியதிகள் மற்றும் நிபந்தனைகளுக்கு உட்பட்டு உரிமம் வழங்கப்பட்ட வர்த்தக வங்கிகளின் உள்நாட்டு வங்கி தொழில் பிரிவில் இராஜதந்திர வெளிநாட்டு நாணயக் கணக்கு (DFA) மற்றும் இராஜதந்திர நாணயக் கணக்கினை (DRA) ஆரம்பிக்க முடியும்.

உசாத்துணை:

 
புலம்பெயர்ந்தோர் தடுக்கப்பட்ட கணக்கு (MBA)

இது யூன் 2013 இன் பின்பு நிரந்தர வதிவிடத்தினைப் பெறும் வதிவற்ற குடியகழ்வோரினால் கொண்டு நடத்தப்பட வேண்டிய விஷேச விதமான கணக்காகும். இது இலங்கையில் இருந்து நிதி மாற்றுவதை நோக்கமாக கொண்டதாகும். பின்வருவன இதன் முக்கிய குணம்சங்களாகும்.

  • குடியகழ்வர் இலங்கையில் உள்ள உரிமம் வழங்கப்பட்ட வர்த்தக வங்கியில் புலம்பெயர்ந்தோர் தடுக்கப்பட்ட கணக்கு (MBA) ஒன்றினை மாத்திரமே ஆரம்பிக்க முடியும்.
  • MBA கணக்கொன்றை திறக்கும் முன் குறிப்பிட்ட வங்கி செலாவணி கட்டுப்பாட்டாளரிடமிருந்து அனுமதியை பெற்றுக் கொள்ளும்.
  • எந்தவொரு நிதி பரிமாற்றங்களும் குடியகல்பவரால் அவருடைய/ அவளுடைய MBA மூலமாக செலுத்தப்படும்.
  • இது குடியகழ்பவரால் நடத்தப்படும் பிரத்தியேக நிதி வைப்புக் கணக்கு என்பதினால் மூடுவதற்கு விஷேட அனுமதி தேவை.
 
வதிவற்றோர் தடுக்கப்பட்ட கணக்கு (NRBA)

குடியகழ்வர் தங்களுடைய ரூபாய்க்கணக்கினை NRBA க்கு மாற்ற எதிர்ப்பார்க்கப்படுகிறார். அவர் உள்நாட்டில் ஈட்டிய நிதி யாவற்றையும் NRBA கணக்கிற்கு வரவு வைக்க முடியும்.
NRBA இன் பிரதான நன்மைகள்

  • சேமிப்பு, நடைமுறை அல்லது நிலையான கணக்கு என்பற்றினால் ஏதாவதொரு கணக்கினை பேணும் ஒரு சாதரண வங்கிக் கணக்காகும்.
  • உள்நாட்டில் இவற்றை விரயம் செய்வதற்கு எந்தவொரு தடையும் இல்லை. நாட்டிற்கு வெளியே அனுப்பும் சந்தர்ப்பத்தில் தற்போது நடைமுறையில் உள்ள புலம்பெயர்ந்தோர் பண ஒதுக்கீட்டு நடைமுறைகளுக்கு உட்பட்டதாக இருக்க வேண்டும்.
  • இலத்திரனியல் பரிமாற்ற அட்டைகள் காசோலைகள் மற்றும் எல்லாவிதமான இலத்திரனியல் நிதி பரிமாற்றங்கள் இந்த கணக்கினூடாக செயற்படுத்தப்பட முடியாது.
 
வதிவற்றோர் வெளிநாட்டு நாணயக் கணக்கு (NRFC)

ஏற்கனவே இலங்கை பிரஜையாக இருந்தவர்கள், வெளிநாட்டில் வசிப்பவர்கள், தொழில் நிமித்தம் வெளிநாட்டிற்கு சென்று இலங்கை வந்து 90 நாட்கள் ஆகியவர்கள் தற்பொழுது இலங்கை பிரஜையாகவோ அல்லது இலங்கை பிரஜை இல்லாமலோ இருப்பவர், கீழ்வரும் நியமங்களுக்கும் நிபந்தனைகளுக்கும் உட்பட்டு செலாவணி கட்டுப்பாட்டாளரினால் அனுமதியளிக்கப்பட்ட வர்த்தக வங்கிகளில் உள்நாட்டு வங்கிப்பிரிவில் அல்லது உரிமம் அளிக்கப்பட்ட நிறுவனங்களில் வதிவற்றோர் வெளிநாட்டு நாணயக் கணக்கு (NRFC) இனை குறிப்பிட்ட வெளிநாட்டு நாணயங்களில் திறந்து பேண முடியும்.

உசாத்துணை:

 
பிணையங்கள் முதலீட்டுக் கணக்குகள் (SIA)

இலங்கைக்கு வெளியில் வாழும் நபரினால் இலங்கையில் அனுமதிக்கப்பட்ட முதலீடுகளில் முதலிடுவதற்காக நிதிகளை அனுப்புவதற்கான சிறந்த கணக்கு SIA ஆகும்.

கீழே தரப்பட்டுள்ள நியமங்கள் மற்றும் நியதிகளிற்கு உட்பட்டு வெளிநாட்டு முதலீட்டாளர்களினால் உரிமம் அளிக்கப்பட்ட வர்த்தக வங்கிகளின் உள்நாட்டு வங்கித் தொழில் பிரிவில் அவர்களது பெயரில் இக்கணக்கு ஆரம்பித்து பேணப்படும். தகுதியான முதலீட்டாளர்களினால் இணைப்பாகவோ அல்லது தனியாகவோ இலங்கை ரூபாவில் அல்லது குறிப்பிடப்பட்ட வெளிநாட்டு நாணயங்களில் பேண முடியும்.

கீழே தரப்பட்டுள்ள நியமங்கள் மற்றும் நியதிகளிற்கு உட்பட்டு அந்நிய செலாவணி திணைக்களத்தின் ஆலோசனை இல்லாமல் விற்பனையின் மூலம் கிடைக்கப்பெறும் பணம், பங்கு இலாபம் போன்ற முதலீட்டின் மூலம் கிடைக்கும் நிதிகளை SIA இன் ஊடாக அனுப்ப முடியும்.

உசாத்துணை:

 
சிறப்பு வெளிநாட்டு முதலீட்டு வைப்புக் கணக்கு (SFIDA)

உரிமம் அளிக்கப்பட்ட வர்த்தக வங்கிகளின் உள்நாட்டு வங்கித் தொழில் பிரிவில் குறிப்பிட்ட எந்தவொரு வெளிநாட்டு நாணயத்திலும் அல்லது இலங்கை ரூபாவில் இலங்கைக்கு வெளியில் வதியும் ஒருவரினால் ஆரம்பிக்கப்படும் கால வைப்பு அல்லது சேமிப்பு வைப்புக்கினையான சிறப்புக் கணக்கே SFIDA ஆகும்.

கீழ் காணும் நியமங்கள் மற்றும் நிபந்தனைகளுக்கு உட்பட்டு அதிகாரமளிக்கப்பட்ட வணிகர்களுக்கு வைப்புகளில் முதலீடு செய்வதற்காக செலாவணி கட்டுப்பாட்டாளர் அனுமதியளித்துள்ளார்

உசாத்துணை:

 
வதிவற்ற இலங்கையரல்லாதோர் வெளிநாட்டு நாணயக் கணக்கு (NRNNFA)

ஒன்றில் தற்காலிகமாக இலங்கைக்கு விஜயம் செய்கின்ற அல்லது இலங்கைக்கு விஜயம் செய்ய எண்ணியுள்ள இலங்கையரல்லாதோருக்கு உள்நாட்டு வங்கித்தொழில் பிரிவில் "குறித்துரைக்கப்பட்ட வெளிநாட்டு நாணயங்களில்" வதிவற்ற இலங்கையரல்லாதோர் வெளிநாட்டு நாணயக் கணக்குகளைத் திறப்பதற்கும் பேணுவதற்கும் அதிகாரமளிக்கப்பட்ட வணிகர்ளுக்கு அனுமதி வழங்கப்படுகிறது. நியதிகளும் நிபந்தனைகளும் பின்வரும் தொழிற்பாட்டு அறிவுறுத்தல்கள்/ பணிப்புரைகளில் குறித்துரைக்கப்பட்டுள்ளன.

உசாத்துணை: